Tourist Places in Pondicherry
Saturday, 26 September 2020
Add Comment
( Tourist Places )
பாண்டிச்சேரி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது விதவிதமான மதுபானங்கள் தான். தமிழகத்தை விட பாண்டிச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவாகவும், நல்ல தரமாகவும் இருப்பதால் இன்றைய இளைஞர்கள் நண்பர்களுடன் சந்தோசமாக இருப்பதற்கு முதலில் பாண்டிச்சேரிக்கு தான் செல்கிறார்கள். பிறகு கோவா, பாங்காக் போன்றவற்றை தேர்வு செய்கிறார்கள். ஆனால் பாண்டிச்சேரி தமிழகத்திற்கு மிக பக்கத்தில் உள்ளது. அங்கு சரக்கு மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பாப்போம்.
Family Tourist Places
* Botanical Garden : 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, பாண்டிச்சேரி பேருந்து நிலையம் மற்றும் பாண்டிச்சேரி Railway Station-க்கு மிக அருகில் உள்ளது. இதில் மீன் அருங்காட்சியகம், சிறுவர்களுக்கான ரயில், மரத்தாலான பாலம் போன்ற பல விஷயங்கள் உள்ளது.
* Rock Beach : பாண்டிச்சேரியில் White Town என்று சொல்லப்படும் இடத்தில்தான் இந்த கடற்கரை உள்ளது. இதில் உள்ள காந்தி சிலையின் முன் நிறைய சினிமா படங்களை எடுத்துள்ளனர். மற்ற கடைகரைகளைப்போல் அதில் மணல்வீடு கட்டியோ அல்லது கடலில் குளிக்கவோ முடியாது. அந்த கடற்கரை முழுவதும் பாறைகளால் ஆனதால் அதில் அமர்ந்துகொண்டு கடல் அலைகளை ரசிக்கலாம்.
* White Town : இந்த இடலத்தில் தான் பிரஞ்சு கட்டிடங்கள் அதிகமாக உள்ளது. அங்கே புகைப்படங்கள் எடுப்பதற்கு மிகவும் அழகான இடங்கள் நிறைய உள்ளது. பிரஞ்சு காலனிக்கு அருகில்தான் Rock Beach இருப்பதால் பிரஞ்சு காலனியில் புகைப்படம் எடுத்துவிட்டு நடந்தே Rock Beach-ற்கு போகலாம்.
* மணக்குளம் விநாயகர் கோவில் : மணக்குள விநாயகர் கோவில் பாண்டிச்சேரியில் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு இடம் என்றே சொல்லலாம். இந்த கோவிலின் மேற்கூரை முழுக்க ஓவியங்கள் நிறைந்திருக்கும். இந்த கோவிலின் கோபுரம் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே விநாயகர் கோவிலுக்கு தங்கத்தால் ஆன கோபுரம் இருப்பது பாண்டிச்சேரியில் மட்டும் தான். இதில் உள்ள ஓவியங்கள் பார்ப்பதற்கு மிக அழகாகவும், அதேசமயம் கோவிலுக்கு ஒரு Rich Look கொடுக்கிறது.
பாண்டிச்சேரியில் சுற்றி பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தாலும் பெரும்பாலான ஆண்கள் பாண்டிச்சேரிக்கு போவது மது அருந்துவதற்காக மட்டுமே. பாண்டிச்சேரியில் வெளிநாடுகளில் கிடைக்கும் அதே மதுபானங்கள் அங்கேயும் கிடைக்கிறது. அதுவும் தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் விலை பாதி விலைக்குத்தான் பாண்டிச்சேரி மதுபானக்கடைகளில் விறக்கப்படுகிறது. அதனால்தான் பாண்டிச்சேரி என்றாலே ஆண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
0 Response to "Tourist Places in Pondicherry "
Post a comment