புத்திசாலியான விவசாயிக்கு கிடைத்த அற்புத வீடு - Tamil stories


புத்திசாலியான விவசாயிக்கு கிடைத்த அற்புத வீடு


  முன்பொரு காலத்தில் ஒரு அழகிய கிராமம் இருந்தது. அதில் 25 வயதுள்ள ராமலிங்கம் என்னும் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனுக்கு விவசாயம் நன்றாகத் தெரிந்தாலும் சொந்தமாக ஒரு நிலமும் இல்லை. தங்குவதற்கு வீடும் இல்லாமலும் இருந்தான். பிறகு ராமலிங்கத்திற்கு திருமணம் செய்து கொள்ளும் எனும் ஆசை வந்தது. ஆனால் உறங்குவதற்கு வீடு இல்லாமல் இருக்கும் நமக்கு எப்படி திருமணம் நடக்கும் என்பதை எண்ணிப் பார்த்தான். பிறகு ராமலிங்கம் வேறு ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு நாட்கள் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டான். இரண்டு நாட்களின் பயணத்திற்குப் பிறகு ஸ்ரீபுரம் என்ற ஊரை வந்தடைந்தான் ராமலிங்கம். அந்த ஊருக்குள் வரும் வழியில் ஒரு பாழடைந்த  கிணற்றையும் அதன் அருகில் விவசாயம் செய்யப்படாமல் ஒரு நிலமும் இருப்பதை கண்டான்.

 பிறகு அந்த நிலத்தைப் பற்றி ஊரில் உள்ள சில நபர்களிடம் விசாரித்த பொழுது அந்த நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதனால் ராமலிங்கம் ஸ்ரீபுரம் ஊரின் ஜமீன்தாரை பார்த்து அவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ஜமீன்தார் வீட்டுக்கு சென்றான். ஜமீன்தாரிடம் நிலத்தை குத்தகைக்கு தாருங்கள் ஐயா அதை வைத்து நான் பிழைத்துக் கொள்கிறேன் என்று கேட்ட பொழுது அவர் அதிர்ச்சி அளிக்குமாறு ஒரு தகவல் ஒன்று சொன்னார். அந்த நிறத்தின் அருகில் உள்ள கிணற்றில் இரண்டு பேய்கள் உள்ளதாகவும், அந்த பேய்கள் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் வருபவர்களை பயமுறுத்தி ஓட விடுவதாகவும் சொன்னார். மேலும் அந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு அதில் பாதி நிலத்தை சொந்தமாக எழுதி வைக்கிறேன் என்று சொன்னால் கூட விவசாயம் செய்ய யாருமே இந்த ஊரில் முன்வர மாட்டார்கள் என்று சொன்னார். அதைக்கேட்ட ராமலிங்கம் ஐயா நான் அதில் விவசாயம் செய்கிறேன் என்னை நம்பி ஒரு நாள் அந்த நிலத்தை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டான். ஜமீன்தாரும் ராமானுஜத்தின் ஆசை போலவே அந்த நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி கொடுத்தார்.

‌  ராமலிங்கம் முதலில் தன் வீட்டில் நன்றாக உணவு உண்டு சாப்பிட்டுவிட்டு இரவு நிலத்தை காண சென்றான். அங்கு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது சிறிது நேரத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரண்டு பேய்கள் வந்தது. ஆனால் ராமலிங்கம் அது இரண்டு பேய்களை பார்த்து பயப்படாமல் தைரியமாக தனது கையில் ஒரு கம்புடன் என்றான். அந்த இரண்டு பேய்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டது, இவன் என்ன செய்தாலும் நமக்கு பயப்படவே மாட்டிக்கிறான். இவனை நாம் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டது. அதன்பிறகு அந்த இரண்டு பேய்களும் ராமலிங்கத்தை பார்த்தே எங்களில் யார் திறமையானவர்கள் என்பதை நீ சொல், என்று சொல்லிவிட்டு அவர் அவர்களின் கதையை சொல்ல ஆரம்பித்தது. ஆனால் ராமலிங்கம் உங்களின் பழைய கதைகள் எதுவும் வேண்டாம் என் கண் முன் நான் சொல்வதை செய்யுங்கள் பிறகு சொல்கிறேன் உங்களில் யார் திறமையான பேய் என்று. அந்த இரண்டு பேய்களுக்கும் ராமலிங்கம் தனித்தனியாக ஒரு வேலை ஒன்றை கொடுத்தான்.

முதல் பேய்க்கு அந்த தரிசு நிலத்தில் ஒரு வீடு ஒன்று கட்ட சொன்னான். மேலும் அந்த வீட்டை இரவு முடிவதற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும் சொன்னான். இரண்டாவது பிக்கு வீட்டை சுற்றி மதில் சுவர் இயக்கி அதில் பல வகையான செடிகளை நடுவதற்கு ஒரு வேளை சொன்னான். இரண்டு பேய்களும் ராமலிங்கம் சொல்லியது போலவே தங்களது வேலைகளை தனித்தனியே பார்க்க ஆரம்பித்தது. அதில் முதல் முதலில் வீட்டை கட்டி முடித்துவிட்டு நான் தான் திறமையான பேய் என்று சொல் என ராமலிங்கத்திடம் சொன்னது. ராமலிங்கம், நான் உங்களை திறமையான பேய் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உங்களை நான் திறமையான பேய் என்று சொன்னால், அந்த இரண்டாவது பேய் என்னை கொன்று விடும். நான் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்டான். முதல் பேய் ராமலிங்கத்திற்கு கையில் ஒரு செடி ஒன்றை கொடுத்தது. இதை எடுத்து உன் கையில் கட்டிக் கொண்டு மீதி செடியை தீயில் போட்டு புகையை விட்டால் அந்தப் பேய் உடனடியாக அழிந்துவிடும் என்று ஒரு யோசனை ஒன்றை சொன்னது. சரி நாளை வா தீர்ப்பை உனக்கு சாதகமாகவே சொல்லுகிறேன் என்று ராமலிங்கம் சொல்லி அந்த முதல் பெரிய அனுப்பி வைத்து விட்டான். இரண்டாவது பேய் தனது வேலையை முடித்துவிட்டு அதேபோல் என்னையே நீ திறமையான பேய் என்று சொல் என ராமலிங்கத்திடம் சொன்னது. முதல் பேயிடம் கூறியது போலவே ராமலிங்கம் கூறியதால் இரண்டாவது பேய் ஒரு கொடியை காண்பித்து அந்த குடியை தீயில் போட்டு புகையை விட்டால் முதல் பேய் இருக்குமிடம் தெரியாமலேயே அழிந்து போகும் என்றும் சொன்னது. ராமலிங்கமும் இரண்டாவது பேயிடம் நீ தான் திறமையான பேய் என்று சொல்கிறேன் என சொல்லி அந்த ஆவியை அனுப்பி வைத்து விட்டான்.

  அடுத்த நாள் அந்த இரண்டு ஆவிகளின் வருகைக்காக ராமலிங்கம் அருகில் உள்ள மரத்தின் அடியில் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அப்போது அந்த இரண்டு ஆவிகளும் ராமலிங்கத்திடம் என்று எங்களில் யார் திறமையான ஆவி என்ற சொல் எனக் கேட்டது. ராமலிங்கமும் கொஞ்சம் அருகில் வாருங்கள் என சொல்லி அந்த இரண்டு பேய்களும் கொடுத்த செடி, கொடி இரண்டையும் நெருப்பில் போட்டு புகையை வைத்தான். அந்தப் புகையால் இரண்டு பேய்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனது. ராமலிங்கத்தின் இந்த புத்திசாலித்தனத்தை கண்டு ஜமீன்தாரும் அந்த நிலத்தை ராமலிங்கத்திற்கு எழுதி வைத்துவிட்டார். மேலும் பேய்கள் கட்டிக் கொடுத்த அந்த வீட்டில் ராமலிங்கம் ஒரு திருமணம் செய்துகொண்டு நலமாக வாழ்ந்து வந்தான்.

  இதிலிருந்து நாம், புத்திசாலியாக இருந்தால் அது ஆவியாக இருந்தால் கூட நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

0 Response to "புத்திசாலியான விவசாயிக்கு கிடைத்த அற்புத வீடு - Tamil stories"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel