புத்திசாலியான திருடர்கள்


திருடர்களின் புத்திசாலித்தனத்திற்கு கிடைத்த பரிசு


ஒரு அழகிய கிராமத்தில் கஜபதி என்ற பண்டிதர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் மிகவும் எளிமையானவர் ஆகவும், எளிமையானவராக இருந்தார். மேலும் அவர் வறுமையில் இருந்ததால், அந்த ஊரில் உள்ள ஜமீன்தாரிடம் சென்று ஏதாவது உதவி செய்யுமாறு கேட்டார். ஜமீன்தார் கஜபதி மீது இரக்கப்பட்டு அவருக்கு ஒரு பசுமாட்டை தானமாகக் கொடுத்தார். மேலும் அந்த பண்டிதர் கஜபதி பசுமாடு கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு திருடர்கள் கஜபதி கையில் பசுமாடுன் செல்வதை கண்டார்கள். உடனே அந்த இரண்டு திருடர்களும் இவனைப் பார்த்தால் ஏமாளியாக தெரிகிறான். அதனால் இவனை எப்படியாவது ஏமாற்றி அவனுடைய பசுமாட்டை நாம் திருடி விடவேண்டும் என்று ஒரு திட்டம் ஒன்றை தீட்டினர். இரண்டு திருடர்களும் சிறிது நேரம் யோசித்து கஜபதி ஏமாற்றுவதற்காக சரியான ஒரு திட்டத்தை போட்டனர்.

அதில் ஒரு திருடன், கணபதிக்கு அருகில் சென்று நடந்துகொண்டே மாடு கழுத்திலிருக்கும் கயிறை கட்டி தனது கழுத்தில் போட்டுக் கொண்டான். மற்றொரு திருடனும் அந்த மாட்டை வேறு ஒரு பக்கத்திற்கு ஓட்டிச் சென்றுவிட்டார். அந்தத் திருடன் மாடு செல்வது போலவே கஜபதி இடம் கொஞ்ச தூரம் நடந்து சென்றான். பிறகு திருடன் கழுத்தில் இருக்கும் கயிறை பிடித்து இரண்டு முறை இழுத்தான். கஜபதியும் மாடு எதற்காக இப்படி நடந்து கொள்கிறது என்று பார்ப்பதற்காக திரும்பி பார்த்தார். கஜபதிக்கு ஒரே ஆச்சரியம். மாடு இருக்க வேண்டிய இடத்தில் பருத்த உடம்பு உள்ள ஒரு மனிதன் இருப்பதைப் பார்த்தார் கஜபதி. பிறகு அவனை நீ யார் இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அந்த திருடனும் சுவாமி இத்தனை நாட்களாக நான் சாபத்திலிருந்து பசுமாடு இருந்தேன். நீங்கள் எனக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சுவாமி என்று அந்த திருடன் சொன்னான்.

 அதற்கு கஜபதி, நான் எப்படி உனக்கு சாப விமோசனம் கொடுத்தேன். நீ சொல்வது நம்ப படுவது போல் இல்லையே என்று சொன்னார். திருடனோ, சாமி நான் சிறுவயதில் மிகவும் சுட்டி பிள்ளையாக இருந்தேன். அப்பொழுது விளையாடிக்கொண்டே தவம் செய்யும் ஒரு முனிவரின் தவத்தைக் கலைத்து விட்டேன். அதனால் அந்த முனிவர் எனக்கு நீ உன் வாழ்க்கை முழுக்க பசுமாடு ஆக இரு என்று சாபம் கொடுத்து விட்டார். மேலும் பிறகு நான் கெஞ்சிய போது, உன்னை யாராவது ஒரு நல்ல பண்டிதர் தானமாக வாங்கினால் நீ சாபவிமோசனம் பெறுவாய் என்று முனிவர் சொன்னதாக திருடன் பண்டிதர்களிடம் சொன்னான். கஜ பதியும் எனக்கு மாடு கிடைக்கவில்லை என்றால்கூட பரவாயில்லை. உனக்கு சாப விமோசனம் கொடுத்ததே மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. இனியாவது யாரிடமும் குறும்பு செய்யாமல் வீட்டிற்குச் சென்று சந்தோசமாக வாழ் என்று கஜபதி சொன்னார். திருடனும் அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிட்டான். மாட்டிற்கு சாபவிமோசனம் கொடுத்த சந்தோஷத்தில் பண்டிதர் கஜபதி வீட்டிற்குச் சென்றார்.

அதே நேரத்தில் அந்த இரண்டு திருடர்களும் அந்த மாட்டை எடுத்துக்கொண்டு ஊரிலுள்ள ஜமீன்தாரிடம் சென்று, ஐயா எனது முதலாளிக்கு உடம்பு சரியில்லை அதனால் இந்த பசு மாட்டை விற்று பணம் கொண்டு வரச் சொன்னார் என்று சொல்லி ஜமீன்தாரிடம் ஒரு பணம் வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். பிறகுதான் தெரியவந்தது ஜமீன்தாருக்கு அதுதான் கஜபதி இடம் கொடுத்த பசுமாடு தான் என்று. ஆனால் கஜபதியோ அதே சமயத்தில் தான் ஒரு மாடுக்கு சாபவிமோசனம் கொடுத்ததாக ஊர்முழுக்க சொல்லிக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு ஊர் மக்கள் அனைவரும் சிரித்தனர் இந்த விஷயம் சிறிது நேரத்தில் அந்த ஊர் ஜமீன்தாருக்கு தெரியவந்தது. உடனே ஜமீன்தார் கஜபதி அழைத்து உன்னிடம் கொடுத்த மாடு திரும்பவும் என்னிடமே வந்து விட்டது. நீயே இதை வைத்து பிழைத்துக் கொள். உனக்கு கொடுத்ததை நான் திரும்ப எடுக்க கூடாது என்று சொல்லி அந்த பசு மாட்டை கஜபதியிடம் ஜமீன்தார் கொடுத்தார். ஆனால் கஜபதி அந்த மாட்டை பார்த்து, உனக்கு நான் எவ்வளவு படித்து படித்து சொன்னேன் ஆனால் நீ திரும்பவும் முனிவரிடம் குறும்பு செய்து நாடாக மாறி விட்டாயே. இனிமேல் உனக்கு நான் சாபவிமோசனம் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார். அதைப் பார்த்த ஜமீன்தார் கஜபதி இந்த முட்டாள்தனத்தை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தார். கடைசிவரை கஜபதிக்கு தான் ஏமாந்தது தெரியவே இல்லை.

0 Response to "புத்திசாலியான திருடர்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel