சோம்பேறிக்கு கிடைத்த தங்கப் புதையல்


சோம்பேறிக்கு கிடைத்த தங்க புதையல்


ஒரு அழகிய கிராமத்தில் ராமு, சோமு என்ற இரு அண்ணன் தம்பிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் அண்ணன் ராமு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவன் ஆகவும், தம்பி சோமு எப்பொழுதுமே சோம்பேறித்தனத்துடனும் இருந்தார்கள். அண்ணன் வெளியில் சென்று விவசாய நிலங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்தாலும், தம்பி வீட்டில் இருந்துகொண்டே தினமும் நன்றாக உணவை உண்டு கொண்டு சோம்பேறித்தனமாக இருந்தான். அதனால் அண்ணன் ராமு, இனி நீ இந்த வீட்டிற்கு வராதே எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள் என்று தன் தம்பியை கோபமாக திட்டி விட்டான். வேறு வழி இல்லாமல் சோமு பகல் எல்லாம் ஊர் முழுக்க சுற்றி திரிந்து இரவு காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த கோவிலில் படுத்து உறங்கினான். சோமு தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு கோவிலுக்குள் ஒரு சத்தம் கேட்டது.

எழுந்து பார்த்தால் உடல் முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு ஒரு அழகான தேவதை அவன் முன் நின்று கொண்டிருந்தது. அந்த தேவதை சோமுவை பார்த்து நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய் உனக்கு நான் ஏதாவது உதவ வேண்டும். உனக்கு என்ன வேணும் என்று கேள் அல்லது உனக்கு என்ன வேலை தெரியும் என்று சொல் நான் உனக்கு உதவியாக இருக்கிறேன் என்று அந்த தேவதை சொன்னது. உடனே சோமு, எனக்கு கொஞ்சம் விவசாயம் மட்டும்தான் தெரியும் வேறு எதுவும் தெரியாது என்று சொன்னான். பிறகு ஆனால் விவசாயம் செய்வதற்கு எனக்கு எதுவும் நிலங்கள் இல்லை என்று சொல்வதற்குள் அந்த தேவதை அந்த இடத்தைவிட்டு மறந்துவிட்டது. அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் இருக்கும் ராஜா ஊர் முழுக்க ஒரு சட்டத்தை இயற்றினார். அது வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு காடுகளில் உள்ள நிலங்களை கொடுப்பதுதான். அதன்படி ராமு, சோமு எவருக்கும் காட்டில் நிலங்கள் வழங்கப்பட்டது.

ராமுவுக்கு கொடுத்த நிலம் மிகவும் அழகாகவும், சோமுவிற்கு கொடுக்கப்பட்ட நிலம் கரடுமுரடாக அதிக பாறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. சோமு அதிலுள்ள நிறைய மரங்களை வெட்டவேண்டும் பார்வைகளை அகற்ற வேண்டும் என்பதற்கு சோம்பேறித்தனத்தை தனது அண்ணனிடம் சென்று எண்ணத்தை நீ எடுத்துக்கொள். உன்னுடையதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னான். ராமு தம்பியின் வெளியே இழுக்கப்பட்டு சரி என்று சொல்லி விவசாய நிலங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது அண்ணன் கிராமத்திற்கு பாறைகளை அகற்றும் பொழுது அதன் கீழ் மிகப்பெரிய தங்க கட்டிகள் கிடைத்தது. அதை பார்த்தவுடன் சோமு தனக்கு நடந்ததை அனைத்தும் கூறி அந்த தங்க கட்டிகள் பாதி பங்கு கேட்டான். ஆனால் அண்ணன் கொடுக்க மறுத்து விட்டு விவசாய நிலங்களை உழவு செய்ய ஆரம்பித்தார்கள். வேறு வழியில்லாமல் சோமுவும் அந்த நிலங்களை வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தான்.

விளைச்சல் முடிந்தபிறகு சோமு மீண்டும் தன் அண்ணனிடம் வந்து, நீ தான் நன்றாக விளைச்சல் எடுத்து விட்டாயே மீண்டும் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று கேட்டான். ராமுவும் எதுவுமே சொல்லாமல் நிலங்களை மாற்றிக்கொண்டான். அப்பொழுது ராமு நிலங்களை உழுது கொண்டிருக்கும் பொழுது இரண்டு பானைகள் நிறைய தங்கக் காசுகள் கிடைத்தது. அதைப்பார்த்த சோகத்திற்கு மனது முழுக்க இருட்டாக மாறிவிட்டது. உடனே தன் அண்ணனிடம் சென்று பங்கு கேட்டதும் அதற்கு ராமு தருவதற்கு மறுத்துவிட்டான். சோகத்துடன் இருந்த சோமு மீண்டும் அதே பாலடைந்த கோயிலுக்குச் சென்று அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்தான். மீண்டும் அந்த தேவதை சோமுவின் முன்வந்து, உனக்கு நான் எவ்வளவோ வாய்ப்புகள் கொடுத்தேன். ஆனால் நீதான் அதைக் எடுத்துக் கொண்டாய். இனியாவது உன் சோம்பேறித்தனத்தை விட்டு வெளியே வா என்று அந்த தேவதை சொல்லிவிட்டு மறந்துவிட்டது.

அடுத்த நாளிலிருந்து சோமு கொஞ்சம்கூட சோம்பேறித்தனம் இல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் கடுமையாக வேலைபார்த்து அதிகமான விளைச்சலை எடுத்தான். சோமுவின் இந்த மாற்றத்தை பார்த்த ஊர் பொது மக்கள் எல்லோரும் அவனைப் பாராட்டினார். உடனே ராமும் தன் தம்பியை வீட்டிற்கு அழைத்தான். உன் சோம்பேறித்தனம் போகத்தான் நான் உனக்கு பங்கு கொடுக்கவில்லை என்று சொல்லி தனக்கு கிடைத்த புதையல் அனைத்திலும் தன் தம்பிக்கும் பங்கு கொடுத்தான். பிறகு அந்த பணத்தை வைத்துக் கொண்டு நிறைய நிலங்களை வாங்கி இருவரும் அதிகமான விவசாயத்தை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

இதற்குத்தான் பெரியவர்கள் அப்பவே சொன்னார்கள், எப்பொழுதுமே சோம்பேறித்தனமாக இருக்காமல் சுறுசுறுப்புடன் இரு என்று. இதிலிருந்து நாம் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர முடிகிறது.

0 Response to "சோம்பேறிக்கு கிடைத்த தங்கப் புதையல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel