வாத்துக்கு கிடைத்த மூன்று வரங்கள்


 முன்பொரு காலத்தில் அழகிய காட்டில் வாத்து ஒன்று இருந்தது. அந்த வாத்து எப்பொழுதும் தனக்கு கிடைத்த உடல் உறுப்புகள் எல்லாம் குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கும். அப்படி ஒருநாள் எனது இறகுகள் நீளமாகவும், மூக்கு குட்டையாகவும் இருப்பதால் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல் இருந்தால் அழகாக தோற்றத்தைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று புலம்பிக் கொண்டிருந்தது. வாத்து புலம்புவதை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த மந்திர சக்தி வாய்ந்த ஆந்தை ஒன்று, வாத்திடும் நீ நினைத்தது போலவே நாளை காலை மாறி விடுவாய் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் பறந்தது. வாத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. சரி பரவாயில்லை என்று சொல்லிவிட்டு அன்று இரவு நன்றாக உறங்கியது.

 அதனால் காலை வாத்து கண் விழித்து பார்த்ததும் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சியின் இறகை தான் பெற்றிருப்பதை கண்டது. உடனே முழுவதுமாக கண்விழித்து பார்த்தால் பார்த்து ஒரு அழகான வண்ணத்துப் பூச்சியாக மாறி இருந்தது. வாத்து பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இனி நான் அழகாகவும், மற்றவர்களை கவரும் வண்ணமாகவும் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு மேலே பறந்து சென்றது. அப்பொழுது தூரத்தில் இருந்து வந்த பருந்து ஒன்று வண்ணத்துப் பூச்சியை பிடித்து சாப்பிடுவதற்காக அருகில் வந்தது. உடனே அந்த வண்ணத்துப் பூச்சி பறக்க முடியாமல் கஷ்டப்பட்டது ஏனென்றால் அதன் சிறகுகள் மிகவும் சின்னதாக இருந்தது. இருந்தாலும் அருகில் இருந்த ஒரு புதருக்குள் சென்று அந்த வண்ணத்துப்பூச்சி தப்பிச் சென்றது. சிறிது நேரத்திலேயே புதருக்குள் இருந்த ஒரு தவளையின் கண்ணில் வண்ணத்துப்பூச்சி பட்டது. அனைவரது கவனத்தையும் கவரும் வண்ணம் அந்த வண்ணத்துப்பூச்சி அழகாக இருந்தால் தவளை அதை பிடித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு வண்ணத்துப்பூச்சியை சாப்பிடும் முயற்சியில் ஈடுபட்டது. ஒருவழியாக வண்ணத்துப்பூச்சி, தவளைடம் இருந்து தப்பிச் சென்றது. மீண்டும் அந்த ஆந்தை வந்தது இப்பொழுது உனக்கு சந்தோசமா என்று கேட்டது. எனக்கு பட்டாம்பூச்சியின் வாழ்க்கை பிடிக்கவில்லை நான் ஒரு மீனாக இருந்தால் தண்ணீருக்கு அடியில் அழகாக அவர்களுடன் இருப்பேன். மேலும் அங்கு எந்தவிதமான மருந்து தொல்லையும் இருக்காது என்று சொன்னது.

  அதற்கு மந்திர‌‌ ஆந்தை, நீ நினைத்தது போலவே மாறி விடுவாய் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றது. கண்மூடி திறப்பதற்குள் வண்ணத்துப்பூச்சியை நீருக்கடியில் அழகான மீனாக மாறியது. ஆச்சரியத்தை தாங்க முடியாத அந்த மீன் சிறிது தூரம் கடலில் நீந்திச் சென்றது. கடலில் சிறிது தூரம் சென்றதும் சுறா மீன்கள் குட்டி அழகான மீனை பிடித்து தின்பதற்காக துரத்திக் கொண்டே வந்தது வேறு வழியில்லாமல் அந்த குட்டி மீண்டும்  சுறா மீனிடமிருந்து தப்பித்து வேறு இடத்திற்கு சென்றது. இப்பொழுது ஆந்தை மீன் வடிவத்தில் வந்து நீ மீனாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று கேட்டது. அதற்கு மீனாக மாறிய வண்ணத்துப்பூச்சி, நான் காட்டில் சிங்கமாக இருந்தால் மற்ற விலங்குகளுக்கு ராஜாவாக இருப்பேன். என்னை யாரும் எந்த தொந்தரவும் செய்யவே முடியாது. மகிழ்ச்சியாகவும் இருப்பேன். அதனால் எனக்கு சிங்கமாக மாறதான் ஆசை என்று சொல்லியது. சரி நீ உன் விருப்பத்தை போலவே சிங்கமாக மாறி விடுவாய் என்று சொல்லிய பிறகு காட்டில் மீன் ஒரு சிங்கமாக மாறியிருந்தது.

  சிங்கமாக மாறிய வாத்து, கர்ஜித்துக் கொண்டே காட்டில் நடந்து சென்றது. சிங்கத்தை கண்டதும் அங்கிருந்த விலங்குகளை வேட்டையாடும் அவர்கள் சிங்கத்தை உறுப்பிற்குள் போட்டு அடைக்க முயற்சி செய்தனர். பாவம் பார்த்து ஆந்தை சிங்கத்தை காப்பாற்றி மீண்டும் ஒரு வாத்தாக மாற்றியது. அப்பொழுதுதான் அந்த வாத்திற்கு புரிய வந்தது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் கவலைப்படாமல் எப்படி வாழ்கிறோம் என்பதே இணைக்க வேண்டும் என உணர்ந்தது. எனக்கு பாடம் கற்பித்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி என சொல்லிவிட்டு ஆந்தையை பார்த்த பொழுது, ஆந்தை காற்றோடு காற்றாக மறைந்து போனது.

இந்த கதையிலிருந்து நாம் எப்படி இருக்கிறோம் என்பதை விட மற்றவர்கள் முன்பு எப்படி வாழ்கிறோம் என்பதே சிறந்தது என்பதை உணர முடிகிறது. இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் WhatsApp மூலம் உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழுங்கள்.

0 Response to "வாத்துக்கு கிடைத்த மூன்று வரங்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel