பேராசை பிடித்த விற்பனையாளர்கள் - Tamil moral stories


விற்பனையாளர்களின் பேராசைக்கு அளவே இல்லை


பழங்காலத்தில், ஆனந்தபுரம் என்ற ஊரில் ஒரு அரசர் நல்லாட்சி செய்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன், செழிப்புடனும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் ராஜா, அந்த ஊரில் இருக்கும் கடைகளில் உள்ள பொருட்கள் தரமாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக மாறுவேடம் அணிந்து அமைச்சருடன் சந்தைக்குள் நுழைந்தார். அப்பொழுது ஒரு கடையில் சென்று பால் வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து கடைக்காரரை பார்த்து ஒரு பாக்கெட் பால் கேட்டார். அந்த பாலை வாங்கி குடித்தவுடன் ராஜா உடனே பாலை விழுங்காமல் வெளியே துப்பிவிட்டார். மேலும் கடைக்காரரை பார்த்து, நான் உன்னிடம் பால் தான் கேட்டேன் அதற்கு நீ வெறும் தண்ணீர் மட்டும் தருகிறாயே என்று கேட்டார். அதைக் கேட்ட கடைக்காரர் எனக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. உனக்கு பால் பிடிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த இடத்தை விட்டு சென்று விடு என் கடையை பார்த்துக் குறை சொல்லாதே என்று சொன்னார்.

ராஜா அந்த இடத்தை விட்டு சிறிது தூரம் சென்றார். பிறகு அமைச்சரைப் பார்த்து நமது ஊரில் உள்ள பொருள்கள் ஏன் இவ்வளவு தரம் குறைவாக உள்ளது என்று கேட்டார். அதற்கு அமைச்சரோ பால் மட்டுமில்லை மன்னா, அனைத்து பொருட்களுமே நமது ஊர் விற்பனையாளர்கள் தரமற்ற பொருட்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னார். ஒரு நல்ல வியாபாரி கூடவா இல்லை என்று ராஜா கேட்டார். அமைச்சர், இல்லை மன்னா அப்படி யாருமே கிடையாது என்று சொன்னார். இல்லை யாராவது ஒரு நல்ல விற்பனையாளர்கள் தரமான பொருட்களை விற்றுக் கொண்டு தான் இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே இப்படி தரமற்ற பொருளை இருக்கின்றார்கள் என்று ராஜா சொன்னார். ஆனால் அமைச்சர் ராஜா சொன்னதை மறுத்து அப்படி யாரும் கிடையாது ராஜா நான் வேண்டும் என்றால் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்று சொன்னார். சரி உங்களின் ஆதாரத்தை காட்டுங்கள் என்று ராஜா சம்மதித்தார்.

  ஒருநாள் ராஜா அந்த ஊரில் உள்ள அனைத்து விற்பனையாளர்களையும் அரண்மனைக்கு அழைத்தார். பிறகு இந்த ஊருக்காக நான் சுவாமிக்கு மிகப் பெரிய யாகம் ஒன்று செய்யப்போகிறேன். அதற்கு நீங்களும் எனக்கு உதவ வேண்டும் என்று சொன்னார். உடனே அந்த பால் விற்பனையாளர்கள் அனைவரும் உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் அதனால் என்ன வேண்டுமென்று கூறுங்கள் அரசே என்று சொன்னார்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு சொம்பு நிறைய பால் கொண்டு வாருங்கள் அதுவே போதும் என்று சொன்னார். அனைவருமே அரசு நீங்கள் கேட்டால் நாங்கள் ஒரு குடம் பால் கூட தர தயாராக இருக்கிறோம் எதற்காக கேட்கிறீர்கள் என்று சொன்னார். அப்போது அமைச்சர் வந்து ஒரு சொம்பு மட்டும் போதும் யாகத்திற்கு நாளை வந்து விடுங்கள் என்று சொல்லி அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். அடுத்தநாள் அமைச்சர் ஒரு இருட்டு அறையில் மிகப்பெரிய அண்டாவை வைத்து பூட்டிவிட்டார்.

  பிறகு விற்பனையாளர்களை ஒருவர் பின் ஒருவராக தன் கைகளில் உள்ள பால் சொம்புகளை சென்று அந்த அண்டாவில் ஊத்தி வருமாறு சொன்னார். அனைவரும் பாலை அதில் ஊற்றி விட்டு ஒரு ஓரத்தில் இருந்தார்கள். பிறகு அமைச்சர் ராஜாவை அழைத்து சென்று அந்த இருட்டு அறையில் விளக்குகளை எரிய விட்டு அந்த ஆண்டவனை பார்த்தார்கள். ராஜாவிற்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது அதில் ஒரு சொட்டு பால் கூட இல்லாமல் முழுவதுமே தண்ணீராக இருந்தது. உடனே ராஜா, அமைச்சரைப் பார்த்து இது என்ன மாயம் அனைவரும் பால் தானே எடுத்து வந்து இருக்க வேண்டும் ஆனால் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் தானே இருக்கிறது என்று சொன்னார். அதற்கு அமைச்சரோ, மன்னா எல்லோரும் நாம் மட்டும்தான் அதில் தண்ணீர் கலக்க போகிறோம். மற்றவர்கள் பால் கலந்திருப்பார்கள் அதில் இந்த ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் என்ன தெரியவா போகிறது என்று நினைத்துக்கொண்டே அனைவருமே தண்ணீர் மட்டுமே கொண்டு வந்தார்கள் என்று சொன்னார். இப்போது புரிகிறதா மன்னா, நான் சொன்னதை உங்களுக்கு நிரூபித்து விட்டேன் என்று சொன்னார்.

  ராஜா உடனே அந்த விற்பனையாளர்களை பார்த்து இனி பாலில் யாராவது தண்ணீர் கலந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தை அமுல்படுத்தினார். பிறகு அதிலிருந்து யாரும் தரமற்ற பொருளை அந்த ஊரில் விற்பதே இல்லை. ராஜாவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் தரமான உணவுப் பொருட்களை வாங்கி உண்டு நலமாக வாழ்க்கையை வாழ்ந்தனர்.

இதிலிருந்து நாம், பேராசைப் பட்டு செய்யும் சிறு தவறுகூட பிற்காலத்தில் நமக்கே ஆபத்தாக முடியலாம் என்பதை உணர முடிகிறது.

0 Response to "பேராசை பிடித்த விற்பனையாளர்கள் - Tamil moral stories"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel