புத்திசாலிக்கு கிடைத்த தங்க புதையல்


புத்திசாலிக்கு கிடைத்த தங்கப் புதையல்  ஒரு ஊரில் ரங்கையா என்ற விவசாயி இருந்தார். அவர் மிகவும் இயல்பாகவும் மூன்று வேளையும் உண்ண உணவு கூட இல்லாமல் இருந்தார். அப்பொழுது அந்த ஊரில் உள்ள ஜமீன்தாரிடம் சென்று,  "நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆனால் எனக்கு விவசாயம் நன்றாக தெரியும் எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்" என்று கேட்டார். அதற்கு ஜமீன்தார், என்னிடம் நிறைய நிலங்கள் உள்ளது அதில் ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருக்கிற ஒரு நிலத்தை உனக்குத் தருகிறேன் அதில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள் என்று அன்போடு சொன்னார். ரங்கையாவும் ஜமீன்தார் சொன்னபடியே அவரது நிலத்தில் விதைத்து உழுது கொண்டிருந்தார் அப்போது ரங்கையாவுக்கு ஏதோ தென்பட்டது. அது என்ன என்று அருகில் சென்று பார்த்தால் இரு பானை நிறைய தங்கக் காசுகள் இருந்தது.

  இது யாருக்காவது தெரிந்தால் ஜமீன்தாரிடம் சென்று சொல்லி விடுவார்கள். அதனால் இந்தப் புதிய விஷயத்தை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று ரங்கையா முடிவு செய்தார். ரங்கையா தன் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எப்படியாவது உளறி விடுவாள், அது ஊர் முழுக்க தெரிந்துவிடும். அதனால் தன் மனைவியை ஏமாற்றுவதற்காக ஒரு திட்டத்தை தீட்டினார். அப்போது ரங்கையா காடுகளில் நிறைய மீன்களை வாங்கி அதை பொறியில் கட்டி வைத்துவிட்டார். பிறகு ஒரு கோழியை வாங்கி ஆற்றுக்கு அருகில் வலையில் மாட்டி வைத்து விட்டார். பிறகு வழக்கம்போல் தனது வீட்டிற்குச் சென்றார். ரங்கையா தன் மனைவியிடம் நான் நிறைய பொறிகளை வைத்து இருக்கிறேன். அதில் நமக்கு உன்ன மாமிசம் கிடைக்க வாய்ப்பு நிறைய இருக்கிறது வா சென்று பார்க்கலாம் என்று சொன்னார்.

  வலையில் அல்லது தூண்டிலில் மாட்டிய மீன் காட்டில் ஒரு பொறியியல் இருந்தது. அதே போல் ஒரு பொறியியல் மாற்றவேண்டிய கோழி மீன்களைப் போல் ஆற்றின் அருகில் ஒரு வலையில் மாட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாமல் நமக்கு உன்ன மாமிசம்  கிடைத்துவிட்டது என்று ரங்கையாவின் மனைவி சந்தோசப்பட்டாள். பிறகு நம்முடைய நிலத்தில் நமக்கு இருப்பார்கள் நிறைய தங்க புதையல் கிடைத்துள்ளது. அதை நாம் யாரிடம் சொல்லாமல் இன்று இரவு சென்று அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விடலாம் என்று ரங்கையா தன் மனைவியிடம் கூறினார்.

  அவர்கள் நினைத்தது போலவே அன்று இரவே அந்த இரு பாடங்கள் நிறைய இருந்த அங்க காசையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். பிறகு அதை அவர்களுடைய நிலத்தில் புதைத்து வைத்து விட்டார்கள். பிறகு இருவரும் வீட்டில் நன்றாக உறங்க சென்றார்கள். ரெங்கையா மட்டும் உறங்கவே இல்லை. ரெங்கையா தன் மனைவி தூங்கியவுடன் அவர்கள் புதைத்து வைத்திருந்த தங்க புதையலை வேறு இடத்திற்கு மாற்றி புதைத்து வைத்து விட்டார். அடுத்த நாள் தனக்கு உடைவை வாங்குவதற்காக ஒரு தங்கக்காசு தருமாறு ரங்கையாவின் மனைவி தன் கணவனிடம் கேட்டாள். ஆனால் அதற்கு ரங்கையா இதை நாம் இப்பொழுது செலவு செய்தால் நாம் மாற்றிக்கொள்வோம். அதனால் இப்பொழுது எடுக்க வேண்டாம் என்று சொன்னார் அதற்கு கோபத்துடன் ரங்கையா மனைவி பக்கத்து வீட்டிற்கு சென்றார். அங்கே என் கணவன் ஒரு கஞ்சனாக இருக்கிறான் என்று சொல்ல ஆரம்பித்து, அவர்களுக்கு கிடைத்த புதையல் முதற்கொண்டு முழுவதையுமே பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னார். இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்றும் சொல்லிவிட்டு என் மனைவி மீண்டும் தனது வீட்டிற்கு வந்தாள்.

  அடுத்த நாளே அவர்கள் எடுத்த புதையலைப் பற்றி ஊர் முழுக்க தெரிந்துவிட்டது. இதை கேள்விப்பட்ட ஜமீந்தாரும் கோபத்துடன் ரங்கையாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். ஜமீன்தார் ரங்கையாவிடம் புதையலை பற்றி கேட்ட பொழுது தான் எதுவுமே தெரியாது என்று பொய் சொல்லி ஜமீன்தாரை அந்த இடத்தைவிட்டு அனுப்பிவிட்டார். பிறகு தன் மனைவியை கோபத்துடன் பார்த்தார். ஊர்மக்கள் முழுவதுமே ரெங்கையாவையும் அவரது மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புதையல் தெரியவில்லை என்று சொன்னீர்களே அன்று நாம் தானே எடுத்து புதையலை புதைத்து வைத்தோம் என்று ரங்கையாவின் மனைவி சொன்னாள். பிறகு அன்று கூட ஒரு கோழி வலையில் சிக்கி கிடைத்ததே, மீன்கள் கூட காட்டி வைத்த பொறியில் மாட்டி இருந்ததே என்று சொன்னாள். அதைக் கேட்ட ஊர் பொதுமக்கள் ரங்கையாவின் மனைவியை பார்த்து சிரித்தனர். ஊர்மக்கள் அங்கிருந்து சென்ற பிறகு ரங்கையா தன் மனைவியிடம் அனைத்தையும் கூறி அன்று இரவே அந்த தங்கப் புதையலை எடுத்து மறைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

இதிலிருந்து நாம், நமக்கு ஒரு புதையல் கிடைத்தாலும் அதை பத்திரமாக பார்த்துக்கொள்ள தெரியவேண்டும் என்பதை உணர முடிகிறது.

0 Response to "புத்திசாலிக்கு கிடைத்த தங்க புதையல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel