மாமியார் கொடுமைக்கு அளவே இல்லை


மாமியார் கொடுமைக்கு அளவே இல்லை தமிழ் சிறுகதை


  நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், பிச்சையம்மாள் என்ற ஒரு பெண் இருந்தார். அவரது கணவன் உடல்நலக்குறைவின் காரணமாக இறந்துவிட்டார். பிச்சையம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். அதில் மூத்த குழந்தையாக ஒரு மகனும் இளைய குழந்தையாக ஒரு மகளும் இருந்தார்கள். பச்சையம்மாள் தனது மகனுக்கு வயதாகிக் கொண்டே போவதால் மகனுக்கு யாரையாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம்  அதற்காக இருந்தது. அருகிலுள்ள வீட்டில் சென்று பொண்ணு பார்க்க சென்றால் பிச்சையம்மாள். பெண்ணை பார்க்க சென்ற உடனே பிச்சையம்மாள் திருமணத்தை நிச்சயம் செய்தாள். அதன் பிறகு சிறிது நேரம் இரு குடும்பத்தினரும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது பிச்சையம்மாள், உனக்கு என்ன பிடிக்கும் மருமகளே என்று கேட்டாள். அதற்கு அந்தப் பெண்ணுடைய அம்மா எனது மகளுக்கு மாங்கா ஊறுகாய் மற்றும் அப்பளம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொன்னார்கள். அருகில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மணப் பெண், தான் திருமணம் செய்த பிறகு அத்தை தனக்கு இதெல்லாம் செய்து கொடுத்து தன்னை ஆச்சரியப் படுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

  கொஞ்ச நாட்களிலேயே பிச்சையம்மாள் தன் மகனுக்கு ஏற்கனவே நிச்சயம் செய்தபடியே அந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்தார். வீட்டிற்கு வந்த நான்கு நாட்களிலேயே அந்த பெண்ணிற்கு, தனது அத்தை ஒரு மிகப்பெரிய தஞ்சம் என்றும் ஒரு மிகப்பெரிய கொடுமை காரி என்றும் தெரியவந்தது. அத்தை, மகன், மகள் என்று மூவருமே சாப்பாட்டிற்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் மருமகளுக்கு எதுவுமே கொடுக்க மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் எப்போது பார்த்தாலும் அத்தை தன் மருமகளை திட்டிக்கொண்டே இருப்பார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வீட்டில் இன்னொரு பெண் தனியாக இருக்கிறாள் என்று நினைத்த பிச்சையம்மாள், தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். எனவே திருமணத்திற்கு தேவையான எல்லா வேலைகளையும் பிச்சையம்மாள் தன் மருமகளை வைத்தே செய்து கொண்டாள். இருந்தாலும் மாங்காய் ஊறுகாய் மற்றும் அப்பளம் இவை இரண்டும் தன் மருமகளுக்கு பிடிக்கும் என்பதால் அதை நாம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள்.

  மருமகள் தன் கணவனிடம் சென்று அத்தை ஊறுகாய் மற்றும் அப்பளம் செய்வதற்கான எல்லா வேலையும் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள். ஆனால் அப்பளம் மற்றும் ஊறுகாயை என்னை செய்யவிடாமல் அவர்களை செய்கிறார்கள் என்று சோகமாக சொன்னாள். இருந்தாலும் பரவாயில்லை, நான் அந்த உரலில் மிச்சமிருக்கும் சிறு துகள்களை யாவது  சாப்பிடுகிறேன் அதுதான் எனக்கு கிடைத்த ஒரே வழி என்று கவலையுடன் சொன்னாள். இதை ஒட்டுக்கேட்ட பிச்சையம்மாள், தன் மருமகளுக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் அந்த உரலில் இருக்கும் மாவை தானே சாப்பிடலாம் என்று முடிவு செய்து அந்த உரலில் தன் தலையை விட்டாள். ஆனால் பிச்சையம்மாளின் தலை அதனுள் மாட்டிக்கொண்டது. பிச்சையம்மாள் யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றாலும் அந்த உரலில் தலை மாட்டிக் கொண்டிருப்பதால் உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாத நிலை வந்துவிட்டது. இது தெரியாமல் அந்த வீட்டிலிருந்த அனைவரும் நிம்மதியாக உறங்கி விட்டனர். அடுத்தநாள் காலையில் வீட்டு வேலைக்காரி வந்து பிச்சையம்மாளை பார்த்தபிறகு அனைவரையும் கூப்பிட்டு அவரை காப்பாற்ற செய்தார்.

  பிச்சையம்மாள் அதை விட்டு வெளியே வந்தாலும் அவளது முகம் அங்கங்கே தடித்தும், வீங்கியும் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் முதுகில் பயங்கரமாக வலி ஏற்பட்டு தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு நகரவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தன் மகளின் திருமணம் முடியும்வரை பிச்சையம்மாள் அந்த நாற்காலியை விட்டு நகரவே இல்லை. 

பிச்சையம்மாள் தன் மருமகளுக்கு செய்த கொடுமையின் காரணமாக தான் ஆசையாக வளர்த்த மகளின் திருமணத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதைப் படித்த பிறகாவது யாரும் எந்த கொடுமையும் செய்யாமல் சந்தோசமாக வாழுங்கள்.

0 Response to "மாமியார் கொடுமைக்கு அளவே இல்லை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel