தங்க முட்டையிடும் வாத்து தமிழ் கதைகள்


தங்க முட்டையிடும் வாத்து
  ஆனந்தபுரம் என்ற ஒரு கிராமத்தில் முருகன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு குடும்பம், குழந்தை என்று யாருமே இல்லை. தினமும் சந்தைக்கு சென்று அங்கு கிடைக்கும் சிறு வேலைகளை செய்து அன்று இரவு உணவு உண்டு வாழ்ந்து வந்தான். ஒரு வேளை சந்தையில் வேலை எதுவும் கிடைக்காவிட்டால் அவன் பாசமாக வளர்க்கும் கோழி இடும் முட்டையை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தான். முருகன் வளர்ப்போம் கோடியை பக்கத்து வீட்டுக்காரர் ஆன கணேஷ் பார்க்கும் பொழுது மிக பொறாமையாக இருக்கும். முருகன் வீட்டுக் கோழி மிகவும் கொழுகொழு என்றும் எடை அதிகமாகவும் காணப்படும். ஒருநாள் முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் கணேஷ், முருகனுடைய கோழியைப் பிடித்து குழம்பு வைத்து முழுவதுமாக சாப்பிட்டு விட்டான்.

  சந்தைக்கு சென்று வேலையை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த முருகனுக்கு கோழியை காணவில்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு பக்கத்து வீட்டுக்காரர் ஆன கணேசன் வீட்டில் தனது கோழி இறக்கைகள் கிடப்பதை முருகன் பார்த்துவிட்டான். முருகன் கணேஷிடம் சென்று கேட்ட பொழுது எனது வீட்டுப் பூனை கோழியை பிடித்து வந்து விட்டது. அந்த கோழியும் இறந்து விட்டதால் நான் அதை சாப்பிட்டு விட்டேன் என்று பொய் நாடகமாடினார். வேறு வழியில்லாமல் கணேஷிடம் இருந்த வாத்து குட்டியை முருகன் கொடுத்து இதை வைத்துக்கொள் என்று சொன்னான். முருகனும் அந்த சின்ன வார்த்தை வாங்கிக் கொண்டே வீட்டில் சென்று வளர்த்து வந்தான்.

  இரண்டு மாதங்கள் கழித்து ஆனந்தபுரத்தில் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு மந்திரவாதி மழைக்கு ஒதுங்க இடம் கேட்டு கணேஷ் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் கணேஷ் மழை நேரத்தில் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி அந்த மந்திரவாதியை நேரில் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டான். உடனே அந்த மந்திரவாதி பக்கத்து வீட்டுக்காரர் ஆன முருகன் வீட்டின் கதவை தட்டினார். அப்போது முருகன் அவருக்கு தங்க இடம் கொடுத்து தான் உன்ன வைத்திருந்த வாத்து முட்டைகளை அவருக்கு கொடுத்து உபசரித்தான். அந்த மந்திரவாதி முருகனிடம் இவ்வளவு சுவையான முட்டைகள் இடும் வாத்தை நான் பார்க்கவேண்டும் என்று கேட்டார். முருகனும் அந்த வார்த்தை மந்திரவாதியிடம் காட்ட இந்த வாத்து உனக்கு எப்போதுமே உபயோகமாக இருக்கும் என்று சொல்லி அந்த வாத்தை தடவி கொடுத்து விட்டு அடுத்த நாளே அவர் அந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டார். வழக்கம்போல் வாத்து முட்டைகளை எடுப்பதற்காக முருகன் கூடிய தொடர்ந்து பார்த்தபோது முருகனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

  வழக்கம்போல் வாத்து சாதாரண முட்டைகள் இடாமல் தங்கம் முட்டைகளை இட்டிருந்தது. இது எல்லாம் அந்த மந்திரவாதியின் செயல்தான் என்பதை புரிந்து கொண்ட முருகன் கூலி வேலைக்கு செல்லாமல் அந்த முட்டைகளை வைத்து நலமாக வாழ்ந்து வந்தான். ஆனால் தன்னிடம் நிறைய பணம் இருப்பதை முருகன் வெளியில் காட்டவே இல்லை. இருந்தாலும் கணேசுக்கு முருகன் நிறைய பணம் வைத்திருப்பது தெரியவந்தது. ஒரு நாள் கணேஷ் மறைந்திருந்து முருகனின் செயல்களை பார்த்தபோது தான் கொடுத்த வாத்து தங்க முட்டை இடுவதை கண்டுபிடித்துவிட்டான் கணேஷ். கணேஷ் தன்னிடம் 2 ஏமாற்றுக்காரர்களை கூட்டிக்கொண்டு அந்த ஊர் நாட்டாமை இடம் சென்றனர். அங்கு கணேஷ் நாட்டாமை பார்த்து, முருகன் வார்த்தைகளை தெரிவித்ததாகவும் அதை இவர்கள் இரண்டு பேரும் நேரில் பார்த்ததாகவும் பொய் கூறி தனது வார்த்தை திருப்பி வாங்கி தருவதாகவும் நான்காமிடம் தெரிவித்தான்.

  நாட்டாமை முருகனை நேரில் கூப்பிட்டு விசாரித்த போது முருகன் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நடந்த அனைத்தையும் கூறிவிட்டான். உடனே நாட்டாமை இந்த வாத்து ஒரு நாள் என்னிடம் இருக்கட்டும்.  இதற்கான‌‌ தீர்ப்பை நாளை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இருவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். மறுநாள் காலை நாட்டாமை அந்த வார்த்தை பார்த்த பொழுது அது தங்க முட்டை இடுவது நாட்டாமைக்கு தெரியவந்தது. உடனே நாட்டாமை இருவரையும் அழைத்து ஒரு நாடகம் ஆட முயற்சி செய்தார். அப்போது நாட்டாமை, இந்த வாத்து எல்லாம் வாத்துகளை போலவே சாதாரண முட்டை இடுகிறது. பிறகு ஏன் இந்த வாத்து பெரிய முட்டை இடுவது போல் இரண்டு பேரும் அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டார். உடனே கனேஷ் இல்லையா என்னோட வாத்து இதே மாதிரி பெரிய முட்டை இடும் என்று சொன்னார். ஆனால் முருகன் ஐயா எனது வார்த்தை தங்க முட்டையிடும் இது என் வார்த்தை இல்லை என்று சொன்னார். உடனே நாட்டாமை கணேஷிடம் அந்த வார்த்தை கொடுத்து அனுப்பிவிட்டார்.

  தனக்கு உறுதுணையாக இருந்த ஒரே வார்த்தையும் பறிகொடுத்த முருகன் மனமுடைந்து நின்றான். அப்போது நாட்டாமை முருகனை பார்த்து உன்னுடைய தங்க முட்டை இடும் வாத்தை நான் வைத்திருக்கிறேன். அதை உனக்குத் தருகிறேன். நீ நன்றாக பிழைத்துக் கொள். என்று சொல்லி முருகனிடம் அந்த தங்க முட்டை இடும் வாத்தை கொடுத்து அனுப்பிவிட்டார்.

இதிலிருந்து நாம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதை வைத்து நலமாக வாழலாம் எனவும், எப்போதும் பொய் கூறாமல் உண்மையை மட்டும் பேசினால் அதற்கான பலன் நம்மை வந்து சேரும் எனவும் நன்றாக உணர முடிகிறது.

0 Response to "தங்க முட்டையிடும் வாத்து தமிழ் கதைகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel