பேராசை பிடித்த அண்ணன் தமிழ் சிறுகதைகள்


பேராசை பிடித்த அண்ணன்


  ஒரு அழகிய கிராமத்தில் இரு அண்ணன், தம்பி இருந்தனர். அதில் அண்ணன் பெயர் கிஷோர், தம்பி பெயர் சுரேஷ். அதில் அண்ணன் கிஷோர் எப்பொழுதும் சுயநலத்துடன் நடந்து கொள்வார் யாருக்கும் எந்தவித உதவியும் செய்ய மாட்டார். ஆனால் தம்பியோ எல்லோருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ்வார். இப்படி இருக்கும் நிலையில், அவர்களது தந்தை தன் கடைசி ஆசையான தன் நிலத்தை இருவருக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுத்தார். தந்தை இறந்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தார்கள்.

  கொஞ்ச நாட்களிலேயே அண்ணன் கிஷோர் குறுக்குவழியில் சென்று நிறைய பணம் சம்பாதித்து அந்த ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரனாக வாழ்ந்து வந்தார். ஆனால் தம்பி சுரேஷ், எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பணத்தை சம்பாதிக்க முடியாமல் எளிமையான மற்றும் வறுமையில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் தம்பி சுரேஷ், தன் அண்ணன் கிஷோர் இடம் சென்று, "அண்ணா உன்னிடம் இருக்கும் மாடுகளை விவசாயம் செய்வதற்காக எனக்கு கொஞ்சம் கடன் கொடு" என்று கேட்டார். அதற்கு கிஷோர், தாராளமாக எடுத்துக்கொள் தம்பி என்று சொன்னார். மாடுகளை வாங்குவதற்காக தன் அண்ணனின் நிலங்களை பார்க்க சென்ற சுரேஷிற்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சுரேஷ் தன் அண்ணனுடைய நிறத்தை பார்க்கும் போது அதில் சில பூதங்கள் அந்த நிலத்தை உழுது கொண்டிருந்தது. சுரேஷ் அந்த பூதங்களை பார்த்து, "இது என் அண்ணனுடைய நிலம் தானே நீ இதில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அந்த பூதம், "நான் உன் அண்ணனுக்கு சொந்தமான பூதம். உன்னுடைய பூதத்தை தேடிப்பார் அது இங்கே எங்கேயாவது படித்து உறங்கிக் கொண்டிருக்கும். நான் உன் அண்ணனுக்கு எப்போதும் உதவி செய்து கொண்டுதான் இருப்பேன்" என்று அந்த பூதம் சொன்னது.

  அந்த பூதம் சொன்னபடியே சுரேஷின் பூதம் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. சுரேஷ் அந்த பூதத்தை எழுப்பி, என் அண்ணனின் பூதம் அவரை நன்றாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது நீ எதற்கு இப்படி சோம்பேறியாக இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அந்த பூதம் எனக்கு நிலங்களை எல்லாம் விவசாயம் பண்ண தெரியாது. ஒரு கடை வைத்து கொடு நான் உனக்கு நிறைய பணம் சம்பாதித்து தருகிறேன் என்று அந்த பூதம் சொன்னது. அவ்வளவு பணம் இருந்தால் நான் எதற்கு உன்னிடம் வரப்போகிறேன் என்று புலம்பியபடியே சுரேஷ் அந்த இடத்தை விட்டு கிளம்பினான். சுரேஷ் தனது தொழிலான பழைய துணி விவாதத்திற்காக தன் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் மூட்டை முடித்து கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது சுரேஷ் வீட்டின் கூரையில் ஒரு பூதம் அழுது கொண்டிருந்தது. சுரேஷ் அந்த பூதத்தை பார்த்து, நீ எதற்காக அழுகிறாய் என்று கேட்டான். அதற்கு அந்த பூதம், "நான் உன் துரதிர்ஷ்டமான பூதம் இவ்வளவு நாள் இந்த வீட்டில் நான் உன்னுடன் சந்தோஷமாக இருந்தேன். இப்போது இந்த வீட்டை விட்டு கிளம்ப எனக்கு மனதே வரவில்லை" என்று அந்த துரதிர்ஷ்ட சொன்னது.

  நாம் இவ்வளவு நாள் கஷ்டப்பட்தற்கு இந்த பூதம் தான் காரணம் என்பதை உணர்ந்த சுரேஷ் அந்த பூதத்தை ஒரு பெட்டிக்குள் அமர சொன்னார். அந்த பூதமும் அந்த பெட்டிக்குள் அமர்ந்தது. உடனே சுரேஷ் அந்தப் பெட்டியை எடுத்து தன்னுடைய நிலத்தில் புதைத்து விட்டான். அதன்பிறகு, சுரேஷ் தனது குடும்பத்துடன் பட்டணத்திற்கு சென்றான். அங்கு அவனது கடைக்கு அந்த நல்ல பூதமும் உதவி செய்து நிறைய பணத்தை சம்பாதித்து கொடுத்தது. கொஞ்ச நாட்களிலேயே சுரேஷ் தனது அண்ணனை விட பல மடங்கு பணத்தை சம்பாதித்து மிகப் பெரிய பணக்காரனாக மாறிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அண்ணன் கிஷோர் தன் தம்பியைப் பார்க்க வேகமாக ஓடி வந்தார்.

  எப்படி டா தம்பி இவ்வளவு பெரிய பணக்காரனாக மாட்டாய் என்று அண்ணன் தன் தம்பியை பார்த்து கேட்டான். அதற்கு தம்பி சுரேஷ் எதையுமே மறைக்காமல், நான் ஒன்றும் செய்யவில்லை என்னுடன் இருந்த துரதிர்ஷ்ட பூதத்தை ஒரு பெட்டிக்குள் போட்டு புதைத்துவிட்டேன் என்று சொன்னான். தன் தம்பி வாழ்க்கை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அண்ணன் கிஷோர் தன் தம்பி புதைத்து வைத்திருந்த அந்த பூதத்தை விடுவித்து விட்டார்.‌ ஆனால் அந்த துரதிஷ்ட பூதம் தம்பி சுரேஷிடம் செல்லாமல், அண்ணன் கிஷோர் மேலே ஏறிக் கொண்டு, இனி நான் உன்னுடன் மட்டும் தான் இருப்பேன் என்று சொன்னது.

தன் தம்பியின் வாழ்க்கையை கெடுக்க நினைத்து அண்ணனுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. இதுவே இந்த கதையின் முழுமையான விளக்கம்.

0 Response to "பேராசை பிடித்த அண்ணன் தமிழ் சிறுகதைகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel