சிங்கம் தந்த தங்க மழை


சிங்கத்தால் கிடைத்த தங்க மழை  முன்பொரு காலத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் தினேஷ், கணேஷ் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். மேலும் அந்த குடும்பத்தில் ஒரு அம்மாவும் தினேஷிற்கு திருமணமாகி ஒரு மனைவியும் இருந்தார்கள். கணேஷ் வீட்டில் வேலைக்கு செல்லாமல் சும்மாவே இருப்பதால் அண்ணன் தினேஷ் இனியும் உனக்கு என்னால் சாப்பாடு போட முடியாது. அதனால் வெளியே சென்று விடு என்று சொல்லி விட்டான்.‌ உடனே கணேஷ் தன் தாயையும் கூட்டிக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு சென்று விட்டான். அங்கே மலையடிவாரத்தின் அருகில் ஒரு குடிசையைப் போட்டு தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தினமும் மலைக்கு மேலே சென்று அங்குள்ள மரங்களை வெட்டி விருதுகளை சந்தைக்கு எடுத்து வந்து வித்து அன்றைய நாளை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். 

  மேலும் அந்த மலையின் மேலே ஒரு பிசாசு இருப்பதாகவும், அதனால் அங்கு யாருமே விறகுவெட்ட போக மாட்டார்கள் என்றும் கணேஷிற்கு தெரியவந்தது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் கணேஷும் அந்த மலையின் மேலே சென்று தினமும் விறகு வெட்டி விற்று பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் கணேஷ்விறகு வெட்டி முடித்ததும் சாப்பிடலாம் என்று ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது சிங்க உருவில் உள்ள ஒரு சிலை கணேஷிடம் பேசியது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது ஒரு உணவு பொருளை எனக்கு கொடு என்று சொன்னது. கணேஷ் அது ஒரு கடவுளாக இருக்கும் என நினைத்து தான் உண்ண வைத்திருந்த உணவை அந்த சிங்கத்தின் சிலையின் வாயில் வைத்து ஊட்டிவிட்டான். சிங்கமும் சாப்பிட்டுவிட்டு நாளை எனக்கு சாப்பிடுவதற்கு உணவு எடுத்துக்கொண்டு வா உனக்கான பலன் உனக்கு கிடைக்கும் என்று சொன்னது. 

உடனே கணேஷ் தன் வீட்டிற்குச் சென்று சிங்கத்தின் சிலை கேட்டதற்காக பலவகையான உணவுப் பொருட்களை செய்வதற்கு பொருட்களை வாங்கி வந்து வீட்டில் அம்மாவிடம் கொடுத்தான். முதலில் பயப்பட்ட அம்மா சரி பரவாயில்லை என்று சொல்லி நிறைய உணவுப் பண்டங்கள் தயார் செய்து அடுத்த நாள் கணேஷிடம் கொடுத்து அனுப்பினார்கள். கணேஷ் சிலைக்கு தான் கொண்டு சென்ற எல்லா உணவுப் பண்டங்களையும் வாயில் வைத்து விட்டு விட்டான். அந்த சிலையும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைத்து உணவுகளுக்கும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கொண்டு வந்த உணவு கூடையை என் வாயின் அருகில் வை. நான் தங்க காசுகள் தருகிறேன். அந்த கூடை முழுவதும் நிரம்பிய பிறகு நீ போதும் என்று சொல்ல வேண்டும். அப்படி நீ சொல்லாமல் ஒரு தங்கக்காசு கீழே விழுந்தாலும் உனக்கு துன்பமே நடக்கும் என்று சொன்னது. கணேஷ் அந்தக் கூடையை சிங்கத்தின் வாயில் வைத்த பொழுது அதிலிருந்து நிறைய தங்க காசுகள் மாயமாக வந்து விழுந்துகொண்டே இருந்தது. 

சிறிது நேரத்தில் கூடையும் நிரம்பியது கணேசும் போதும் என்று சொல்லி தங்க மழையை நிறுத்தி விட்டான். பிறகு அந்த தங்க காசுகள் எல்லாம் தனது வீட்டிற்கு எடுத்துச்சென்று தாயிடம் கொடுத்து, அவர்கள் இருந்த வீட்டை இடித்துவிட்டு மிகப்பெரிய வீடு கட்டி அருகில் உள்ள நிலத்தையும் பணத்திற்கு வாங்கி அங்கு விவசாயம் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்கள். சில நாட்களில் அண்ணன் தினேஷ் அவர்களுக்கு தம்பி மற்றும் அம்மா இருவரும் செழிப்பாக வாழுகின்றனர் என்ற செய்தி காதுக்கு வந்தது. அதனால் தம்பி கணேஷை பார்க்க தன் மனைவியுடன் கணேஷ் வீட்டிற்கு சென்றான் தினேஷ். தன் தம்பியை பார்த்த உடன் நீ எப்படி இவ்வளவு பெரிய ஆளாய் என்று தினேஷ் கேட்டபோது, கணேஷ் கொஞ்சம் கூட யோசிக்காமல் நடந்த எல்லாவற்றையும் கூறிவிட்டான். அதைக் கேட்ட தினேஷிற்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. தங்கம் எவ்வளவு சுலபமாகக் கிடைத்தது என்றால் எப்படி விடுவது நாமும் அதே போல் செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். 

உன்னை தினேஷ் தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியிடம் அனைத்து வகையான பலகாரங்களையும் செய்ய சொல்லி அந்த சிங்கத்தின் சிலையை எடுத்துக்கொண்டு சென்றான். அங்கே சிலைக்கு எல்லா பலகாரங்களையும் ஊட்டிவிட்டான் அதேபோல் அந்த சிங்கத்தின் சிலையும் கூடையை என் வாயருகில் கொண்டு வா உனக்கு தான் தங்க காசுகள் தருகிறேன் என்று சொன்னது. தினேஷ் அந்தக் கூடையை சிலையின் வாயில் வைத்ததும் தங்க காசுகள் மளமளவென வந்து குவிந்தது. கூடை நிரம்பி வழிந்து கொண்டிருந்த போதும் தினேஷ் போதும் என்று சொல்லவே இல்லை. உடனே சிங்கத்தின் வாயில் வந்து இந்த தங்க மழை நின்று விட்டது. பார்த்தவுடன் தினேஷ் என்ன தங்கம் என்னை விட்டதே என்று சோகம் ஆகிவிட்டான். சிங்க சிலையும் எனது வாயில் ஒரு தங்கக்காசு மாற்றிக் கொண்டது. உன் கையை வைத்து அதை எடுத்துவிடு மீண்டும் நான் உனக்கு தங்க காசுகள் தருகிறேன் என்று சொன்னது. தினேஷும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிங்க சிலையின் வாயில் தன் கையை விட்டான் உடனே அந்த வாய் மூடி விட்டது ‌. தினேஷ் எவ்வளவு முயற்சி செய்தும் தன் கையை அந்த சிலையை இருந்து எடுக்கமுடியவில்லை அவன் கூலியில் நிறைய தங்கக் காசுகளும் கல்லாக மாறியது. கணவனைக் காணவில்லை என்று தினேஷின் மனைவி தேடிக் கொண்டு அந்த மலையின் மேல் ஏறி வந்தாள். அப்பொழுது தன் கணவன் மாற்றிக் கொண்டதை கண்டு அழுது கொண்டே என் மகன் அவனை விட்டுவிடு என்று சிங்கத்தின் சிலையின் முன் கேட்டுக் கொண்டாள். சிலையும் கருணையுடன் தினேஷின் கையை விடுவித்தது. இருவரும் அங்கிருந்து தலைதெறிக்க வீட்டுக்கு ஓடிச் சென்றனர்.

இதிலிருந்து நாம் பேராசைப் படக் கூடாது என்றும், இருப்பதை வைத்து நலமாக வாழ வேண்டும் என்றும் உணர முடிகிறது.

0 Response to "சிங்கம் தந்த தங்க மழை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel