முனிவர் கொடுத்த மூன்று வரங்கள்


முனிவர் கொடுத்த மூன்று வரங்கள்
  பழங்காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அங்கே மூன்று சகோதரர்கள் தன் சிறிய வயதில் இருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடம் ஒரு சிறிய வீடு, கொஞ்சம் நிலம், ஒரு மாமரம் மட்டுமே இருந்தது. அவர்கள் மூவரும் மா மரத்தில் உள்ள மாம்பழங்களை சந்தையில் விற்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மாம்பழங்களை விற்று கிடைக்கும் பணம் அன்றாட செலவிற்கும், அவர்கள் சாப்பிடும் உணவிற்குமே சரியாக இருந்தது. அப்பொழுது அந்த கிராமத்திற்கு இமயமலையிலிருந்து ஒரு முனிவர் வந்திருந்தார். அவர் என்ன சொன்னாலும் பலிக்கும் எனவும், அவர் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு முனிவர் எனவும் ஊர்முழுக்க பேசிக்கொண்டிருந்தனர். இது அந்த மூன்று சகோதரர்களின் காதுகளுக்கும் சென்றடைந்தது.

உடனே அந்த மூன்று சகோதரர்களில், முதல் சகோதரன் மாம்பழங்களை எடுத்துக் கொண்டு அந்த முனிவரை சந்திக்க சென்றார். முதல் சகோதரன் கொண்டு வந்திருந்த மாம்பழங்களில் சுவையான மாம்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான் அதை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முனிவர் நான் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று சொன்னார். அதற்கு முதல் சகோதரன், சாமி எனக்கு ஒரு 20 மாடுகள் இருந்தால் நான் நன்றாக பிழைத்துக் கொள்வேன் பண கஷ்டமே இருக்காது என்று சொன்னான். அதற்கு முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். முதல் சகோதரன் தன் வீட்டிற்கு சென்று பார்த்த உடன் அங்கு முனிவர் சொன்னது படியே 20 மாடுகளுக்கு மேலாக இருந்தது.

  இரண்டாவது சகோதரனும் மாம்பழங்களை எடுத்துக்கொண்டு முனிவரை பார்க்கச் சென்றான். அங்கு முனிவருக்கு மிகவும் பணிவாக மாம்பழங்களை கொடுத்து முனிவரிடம் ஒரு வரத்தை கேட்க ஆரம்பித்தான். அது சுவாமி எனக்கு நிலம் இருக்கிறது ஆனால் அந்த நிலத்தில் விவசாயம் பண்ண முடியவில்லை நீங்கள் அந்த நிலத்தில் அதிக லாபம் பார்க்கும்படியான விவசாயம் செய்யும் வகையில் எனக்கு வரம் கொடுங்கள் என்று கேட்டான். முனிவரும் அப்படியே ஆகட்டும் என இரண்டாவது சகோதரருக்கு அவர் கேட்ட வரத்தை கொடுத்தார். அந்த இரண்டாவது சகோதரன் வீட்டிற்கு சென்று பார்த்த உடனே அவருடைய நிலத்தில் நல்ல பயிர்கள் வளர்ந்து இருந்தது.

  முதல் இரண்டு சகோதரர்களை போலவே மூன்றாவது சகோதரனும் அவரை பார்க்க சென்று இருந்தான். அவன் முனிவரை பார்த்த உடனே, சுவாமி உங்களது ஆசை எனக்கு எப்பொழுதும் கிடைக்கும் ஆனால் எனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை அதனால் திருமணம் ஆவதற்கு ஒரு பொண்ணு தாருங்கள் என்று கேட்டான். முனிவரும் அவன் கேட்ட வரத்தை அப்படியே கொடுத்தார். மூன்றாவது சகோதரன் வீட்டிற்கு சென்று பார்த்தவுடன் அவனுக்காக ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள காத்திருந்தாள்.

  முனிவர் அந்த மூன்று சகோதரர்களுக்கும் வரங்களைக் கொடுத்து விட்டு மீண்டும் இமயமலைக்கு யாத்திரை சென்று விட்டார். மனிதர் கொடுத்த அந்த மூன்று வரத்தையும் வைத்து மூன்று சகோதரர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாக மாறிவிட்டனர். ஒரு வருடம் கழித்து அந்த முனிவர் மீண்டும் ஸ்ரீபுரம் ஊருக்கு வந்தார்.  ஊரை நெருங்கும் பொழுது அவருக்கு அந்த மூன்று சகோதரர்கள் பற்றி நினைவு வந்தது அதனால் அவர்களைப் பார்ப்பதற்கு பிச்சைக்காரனைப் போல் மாறுவேடத்தில் சென்றார். முதல் சகோதரன் வீட்டிற்குச் சென்று எனக்கு கொஞ்சம் பிச்சை போடுங்கள் சுவாமி என்று அந்த முனிவர் மாறுவேடத்தில் கேட்டார். அதற்கு நான் உனக்கு ஒன்றும் தர முடியாது இந்த இடத்தை விட்டு வெளியே போ என்று கோபத்துடன் அந்த முதல் சகோதரன் சொன்னான். அதைக் கேட்ட முனிவருக்கு கடுமையான கோபம் வந்தது முனிவர் மீண்டும் தனது சுயரூபத்தைக் வந்து உனக்கு கொடுத்த வரத்தை நான் திரும்ப எடுத்துக் கொள்கிறேன் என்று எடுத்துக் கொண்டார். அதனால் அந்த முதல் சகோதரன் மறுபடியும் ஏழையாக மாறி விட்டான்.

  இரண்டாவது சகோதரன் வீட்டிற்கு சென்று அதே போல் எனக்கு பிச்சை போடுங்கள் சுவாமி என்று அந்த முனிவர் சொன்னார். அதற்கு இரண்டாவது சகோதரன், இது என்ன சத்திரமா வந்தவர்களும் சாப்பிட்டு செல்வதற்கு என்று சொன்னான். அதைக் கேட்ட முனிவருக்கு கடுமையான கோபம் வந்தது முனிவர் தன் சுய பருவத்திற்கு வந்து இரண்டாவது சகோதரனுக்கு கொடுத்த வரத்தையும் திரும்ப எடுத்துக் கொண்டார். உடனே அந்த இரண்டாவது சகோதரனுடைய சொத்துக்கள் மற்றும் நகைகள் எல்லாம் மறைந்து போனது. முனிவர் மூன்றாவது சகோதரி பார்க்க செல்லும் பொழுது நேரம் ஏழு மணி ஆகிவிட்டது. அதனால் முனிவர் அந்த மூன்றாவது சகோதரனிடம் ஐயா எனக்கு உறங்குவதற்கு உங்கள் துணை வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்.

உடனே அந்த மூன்றாவது சகோதரன் முதலில் உள்ளே வாருங்கள் என்று கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனுக்கு சாப்பாடு போட்டார். பிறகு தங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதைக் கண்ட முனிவருக்கு மனம் குளிர்ந்து மீண்டும் தன் சுய ரூபத்தில் வந்தார். முனிவர் அந்த கணவன் மனைவியை பார்த்து ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு மரத்தின் அருகில் சென்று பாருங்கள் என்று சொல்லிவிட்டு முனிவர் மீண்டும் இமய மலைக்கு யாத்திரை சென்று விட்டார். முனிவர் சொன்னது போலவே மூன்றாவது சகோதரனும் அவனது மனைவியும் அந்த மரத்தின் அடியில் சென்று பார்த்த பொழுது, அவர்களுக்கு மூன்று மிகப் பெரிய பானை நிறைய தங்க காசுகள் கிடைத்தது. மூன்றாவது சகோதரன் அவன் மனைவியுடன் அந்த தங்க காசுகளை வைத்து அந்த ஊரில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

இதிலிருந்து நாம், ஏழைகளுக்கு மற்றும் இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் நலமாக வாழலாம் என்று தெளிவாக உணர முடிகிறது.

0 Response to "முனிவர் கொடுத்த மூன்று வரங்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel