தங்க புதையல் கிடைக்கும் நிறைந்த வீடு


தங்க புதையல் கிடைக்கும் மந்திரம் நிறைந்த வீடு

  முன்பு ஒரு காலத்தில், ஒரு அழகிய கிராமத்தில் பாழடைந்த அம்மன் கோவில் ஒன்று இருந்தது. அந்தக் கோயிலை சுற்றி ஒரு ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தது அந்த நிலம் அம்மனுக்கு சொந்தமான நிலம் என்பதால், யாருமே அந்த நிலத்திற்கு செல்லக்கூட பயந்து கொண்டிருந்தனர். அதே ஊரில் ஒரு பன்னையாரும் வாழ்ந்து வந்தார். அவர் பேராசை பிடித்தவர் மட்டுமல்லாமல் மற்றவர்கள் பொருள்களையும் அபகரிக்கும் குணம் கொண்டவர். ரொம்ப நாட்களாக அந்த ஊரில் இருக்கும் பண்ணையாருக்கு அம்மன் கோயிலை சுற்றியுள்ள நிலத்தை வளைத்து போட வேண்டுமென ஒரு எண்ணம் இருந்தது. அவர் நினைத்தது போலவே ஒரு நாள் அம்மனுக்கு சொந்தமான இடத்தில் தன்னுடைய இடம் என்று பொய் சொல்லி ஒரு வீட்டை கட்டினார்.

மற்றவர்களைப் போலவே அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் ஒரு தங்க முடிவு செய்தனர். கிரகப்பிரவேசம் நடந்த அன்று இரவு பண்ணையாருக்கு தூக்கம் வரவே இல்லை. மற்ற குடும்பத்தில் உள்ள எல்லோருமே நன்றாக உறங்கி விட்டனர். இரவு நெருங்க நெருங்க பண்ணையாருக்கு பயமும் அதிகமாகி கொண்டே இருந்தது. சரியாக இரண்டு மணி இருக்கும் பொழுது பண்ணையாருக்கு ஒரு குரல் ஒன்றுகேட்டது. அது நீ இந்த வீட்டை விட்டு வெளியே ஓடி விடு இல்லையென்றால் உன் உயிர் போய் விடும் என்று கேட்டது. அது வேறு யார் குரலும் அல்ல அவர் அபகரித்த நிறத்தில் சொந்தக்காரரான அவனுடைய குரல் தான் என்பதை அந்த பண்ணையார் புரிந்துகொண்டான். உடனே தன் குடும்பத்துடன் பண்ணையார் தனது பழைய வீட்டிற்கு நடுச்சாமத்தில் ஓடிவிட்டார். பிறகு அந்த வீட்டில் யாருமே பயன்படுத்தாமல், அந்த ஊரில் உள்ள பாழடைந்த கோயிலைப் போலவே அந்த வீடும் கொஞ்ச நாட்களில் பாழடைந்து விட்டது.

  ஒருநாள் அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு ஏழை விவசாயி ஒருவர் தன் குடும்பத்துடன் வந்தார். அப்பொழுது மற்றவர்களிடம் தனக்கு தங்குவதற்கு அல்லது வாடகைக்கு ஒரு வீடு கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தார். இந்த ஊரில் வைத்திருக்கும் அந்த ஒரு வீட்டைத் தவிர வேறு எந்த வீடும் காலியாக இல்லை எல்லோருமே குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். அந்த விவசாயி உடனே பண்ணையாரிடம் சென்று எனக்கு தங்குவதற்கு வீடு இருக்குமா என்று கேட்டார் அந்த பண்ணையாரும் அந்த வீட்டில் யாரும் தங்க வரவில்லை இவர் தலையில் கட்டி விடலாம் என்று மாதம் ஆயிரம் ரூபாய் வாடகையாக கொடுத்துவிட்டு நீங்கள் அந்த வீட்டில் தங்கலாம். ஆனால் நீங்கள்தான் அந்த வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். வீடு கிடைத்தவரை போதும் என்று அந்த ஏழை விவசாயம் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த வீட்டை சுத்தம் செய்து தன் குடும்பத்துடன் அந்த வீட்டில் தங்கினார். 

  உறங்க வீடு கிடைத்து விட்டது ஆனால் உண்ண உணவு இல்லாமல் அந்த ஏழை விவசாயி மிகவும் சோகத்துடன் இருந்தார்.இப்படி பட்டினியாய் கிடைப்பதற்கு குடும்பத்துடன் இறந்து விடலாம் என்று முடிவு செய்தார் அப்பொழுது அவருக்கு படுக்கை கேட்டது போலவே ஒரு குரல் ஒன்றுகேட்டது அது "கொட்ட வா கொட்ட வா" என்று கேட்டது. அந்த ஏழை விவசாயம் நாம இருக்கலாம் என்றுதான் முடிவு செய்து இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நாம் கேட்டிருந்த குரலும் ஒரு ஆவியின் குரல் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து உடனே கொடுங்கள் இந்த கூரை இடிந்து விழுந்து நாங்கள் இழந்து விடுகிறோம் என்று சொன்னார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக அவர் வீட்டின் மேற்கூரையில் இருந்து தங்க நாணயங்கள் அவரின் வீட்டில் வந்து விழுந்தன. அப்பொழுது நீங்கள் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எனக்கு பூஜை செய்யுங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள். என்று அந்தக் குரல் சொன்னது அந்த ஏழை விவசாயி அந்த தங்க நகைகள் வைத்து தன் வறுமையை போக்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

  ஒருநாள் அந்த ஊரில் உள்ள பண்ணையார் அந்த ஏழை விவசாய பார்ப்பதற்காக கோவில் நிலத்தில் அவர் கட்டிய வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று பார்த்தால் அந்த ஏழை விவசாயி மிகவும் செல்வந்தனாக மாறி இருந்தார். இது எப்படி என்று கேட்டதற்கு, அந்த விவசாயி கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நடந்ததை அப்படியே சொல்லி விட்டார். அதைக்கேட்ட பண்ணையாருக்கு பேராசை மட்டும் இல்லாமல் ஒரு கெட்ட எண்ணமும் வந்தது. உடனே பண்ணையாரை அந்த விவசாயி அந்த வீட்டிலிருந்து தொலைத்துவிட்டு தன் குடும்பத்துடன் வந்து அந்த வீட்டிலேயே மறுபடியும் தங்கினார். பிறகு ஒரு நாள் பௌர்ணமி அன்று பண்ணையாரும் அவரது குடும்பமும் தங்க நாணயங்கள் வரும் என்று எண்ணி காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த வீட்டின் கூரையிலிருந்து 100 தேள் வந்து விழுந்தது. 

  பண்ணையாருக்கு ஆரம்பத்தில் கேட்ட அதே அவனுடைய குரல் மீண்டும் கேட்டது. அப்போது நீ பேராசை பிடித்தவனாக இருந்தால், உனக்கு இந்த மாதிரியான துன்பங்களே வந்து சேரும் அதனால் நீ உன்னுடைய இடத்திற்கு ஓடிவிடு என்று கேட்டது. வேறு வழியில்லாமல் பண்ணையாரும் தன்னுடைய பழைய வீட்டிற்கு சென்று வாழ்ந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த ஏழை விவசாயிக்கும் மீண்டும் நீயே அந்த வீட்டில் தங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள் என்று சொன்னார்.

இதிலிருந்து, நாம் பேராசைப்பட்டு இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் நம்மிடம் இருப்பதும் பறி போகும் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

0 Response to "தங்க புதையல் கிடைக்கும் நிறைந்த வீடு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel