பஞ்சாயத்து தலைவரின் பேராசை


பேராசைக்கு பேர்போன பஞ்சாயத்து தலைவர்


  மன்னர்புரம் என்ற அழகிய கிராமத்தில், பேராசை பிடித்த ஒரு பஞ்சாயத்து தலைவர் இருந்தார். அவர் மக்களுக்காக எந்தவித நல்லதும் செய்யாமல், அரசாங்கத்தில் இருந்து வரும் மக்களின் வரிப்பணத்தை கூட தனது மனைவியிடம் கொடுத்து வங்கியில் சேமித்து வைத்துக் கொள்வார். மேலும் ஊர் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. வேறு வழியில்லாமல் மக்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவரிடம் சென்று, ஐயா முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தண்ணீர் எடுப்பதற்கு சுமார் பத்து கிலோமீட்டர் வெளியூருக்கு நடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக தாங்கள் தான் ஏதாவது வழி செய்யவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு பஞ்சாயத்து தலைவர், என்னால் ஏதாவது உங்களுக்கு உதவி செய்ய முடிந்தால் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன் இந்நேரம் உங்கள் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து இருப்பேனே என்று சொன்னார்.

  ஊர் மக்களில் ஒருவர் ஐயா நமது ஊரில் ஒரு கிணறு தோண்டினால் அதில் வரும் தண்ணீரை வைத்து தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துவிடலாம் என்று சொன்னார். அதற்கு பஞ்சாயத்து தலைவர், அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு செல்வேன். ஏதாவது கொஞ்சம் தொகை என்றால் நான் பணத்தை போட்டு கிணறு வெட்டலாம். ஆனால் கிணறு வெட்டுவதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஊர் மக்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவரை சொல்லியதைக் கேட்டு வருத்தத்துடன் தங்களது வீட்டிற்கு சென்றனர். அப்போது அதே ஊரில் வசிக்கும் ராஜா என்ற இளைஞன் பஞ்சாயத்து தலைவரை பார்ப்பதற்காக சென்றான். ராஜா பஞ்சாயத்து பார்த்து , அரசாங்கத்திலிருந்து மக்களுக்காக உங்களுக்கு பணம் வரும் அல்லவா அந்த பணத்தை வைத்து கிணறு வெட்டி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பஞ்சாயத்துத் தலைவரோ அப்படி எதுவும் பணம் எதுவும் வரவில்லை. அதனால் என்னால் கிணறு வெட்ட முடியாது என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார்.

  வேறு வழியில்லாமல் ராஜா அனைத்து ஊர் மக்களிடம் பேசி வீட்டிற்கு ஆயிரம் என்ன வசூல் செய்து மக்களே அவர்களுக்கான கிணறு வெட்ட முடிவு செய்தனர். கிணறு வெட்டுவதற்காக சிறிது புளியை தோன்றியதும் பாறை தென்பட்டது. அதில் ஒருவர் இந்த பாரியை தனிக் கிணறு வெட்ட வேண்டும் என்றால் பல லட்சக்கணக்கில் பணம் செலவாகுமே அவ்வளவு பணம் நம்மிடம் இல்லை என்று சொல்லிவிட்டு, அந்த வேலையை அப்படியே போட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்கள். இந்த இடத்தில் ராஜா சிறிது நேரம் யோசித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் இரவு நேரம் அந்தக் குழுவிடம் வந்து நாலு குடம் நிறைய எண்ணையை அதில் ஊற்றி விட்டு பிறகு வீட்டிற்குச் சென்றார். இதனால் அந்த கிணறு வெட்டிய கொலையை பார்த்த அனைவரும் ஆச்சரியத்துடன் இருந்தனர். கிணற்றில் தண்ணீர் ஒன்று நினைத்தால் என்னை வந்திருக்கிறதே என்று ஆச்சரியமாக அனைவரிடமும் சொன்னார்கள். இந்த விஷயம் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு சென்றடைந்தது.

பஞ்சாயத்து தலைவர் இந்த எண்ணெய்க் கிணறு நமக்கு இருந்தால் பல கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மக்களிடம் சென்று உங்களுக்காக நானே இந்த கிணறு வெட்டி தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி, அந்த கிணறு கட்டுவதற்கான செலவு அனைத்தையும் பஞ்சாயத்து தலைவர் ஏற்றுக் கொண்டார். பல லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து பாறையைக் குடைந்து மிக ஆழமாக கிணற்றை வெட்டினார்கள். பிறகு அதிலிருந்து மளமளவென தண்ணீர் வந்து கிணறு நிரம்பிவிட்டது. என்னை வரும் என்று நினைத்த பஞ்சாயத்து தலைவருக்கு தண்ணீர் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி வேறு வழியில்லாமல் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். அன்றிலிருந்து அந்த ஊரில் நிலவிய தண்ணீர் பஞ்சமும் தீர்ந்தது. ராஜாவும் மன மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றான்.

இதில் நாம், பேராசைப் பட்டு மக்களின் பணத்தை நாம் சுரண்டினால் அது எந்த வழியிலாவது மீண்டும் மக்களை சென்றடையும் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

0 Response to "பஞ்சாயத்து தலைவரின் பேராசை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel